Posted by: brak | December 2, 2008

My Tour Diaries – I

I rushed up to the near by ATM to withdraw few hundreds. Prasoon, Dinesh and Kishore were waiting for me on the other side of the road. We four shared three seated auto rickshaw and reached Poornima Taravels which was near by Anand Rao Circle. Everyone gathered at Poornima Travels at 10.30 pm. Our team strength stood up to seventeen. As soon as we get into the bus, I occupied the window seat. I went to deep sleep as soon as I propped up against the push back seat. A Soughing wind disturbed my deep sleep very often. Every one started greeting Prasana and Santhosh when the clock struck 12. I too joined the greeting rally and smeared the cake on both of their faces. We all sang birthday song and after that every one went for sleep.

We reached Madikiri at 6.30 am. It is the capital of Coorg District and it is also known as Mercara. Coorg is popularly known as Scotland of India. The language spoken here is kodava. This language doesn’t have written script. Kodava language is one among the 27 Dravidian Languages. I had Coorg Coffee and most of my colleagues still preferred tea. While sipping the frothy coffee, I noticed a black Maruthi Esteem passed by, “Proud to be Kodava” slogan was written on its rear mirror. There is no doubt in there boast, India’s first Army General Kariyappa hails from this place and most of the young men from this village make a way to Army and making a real pride to their people. Meanwhile, sturdy porters unloaded the luggage from our bus. Driver started the bus and made two big peeps, we all got into the bus. Our adventuring camp location was based in Kakkabe.

The way to Kakkabe was very narrow and in some places it was gorge. All the ponds were gilded by the early sun beam. Most of the houses were tucked away from the motor road. The Sun peacefully sailed through the clouds. Birds perched at the tree top and welcomed the day by singing. Trees dances to the quiet wind.

Bus stopped in between villages to unload the luggage. Apart from the passenger service, the parcel service fetches good revenue to these travel agencies. At 9.30 am we reached Kakkabe, Mr.Sagar proprietor of Jungle Mount adventures welcomed us. Kakkabe is the largest producer of honey in South-East Asia. Again I missed to visit the honey farms. Kakkabe is not for tourist; rather it is a paradise for intrepid trekkers. Most of the adventures camps were located at this place.

Jungle Mount adventure’s cottages were not so sophisticated but it was located in idyllic surroundings. It has six cottage huts and two dinning huts. Sluggish River passes beside the cottage and it may latter confluence with River Cauvery.

As soon as I finished my breakfast I waded into the river. I winced after few minutes, made worse by stepping in to the Icy water puddle. We struggle to row the canoe in our rudimentary stage. Later we learnt to row according to the stream flow. We canoed beneath the branches; it greeted us by brushing its leaves against our face.

We were geared to Chelavara falls for rappelling. I was the first person to lower myself with a rope coiled around the body from a mountainside which was more than 100 ft in high and the falls were just 3 ft far beside from our rappelling point. Followed by me every one rappelled. Anu inquisitively watched our activities and she captured our adventurous.

At the gathering gloom, all diurnal rested and nocturnal started their day. We had a very harsh nocturnal drive in Mahindra 4X4 truck. Mr.Sagar drove the vehicle at a speed of 40 Kmph in the hilly bay without headlight blown in the half moon light. I had faith only on Mahindra as well as on Sagar. We had our delicacies supper in front of the dying ember. I huddled under the blanket and slept on the bed.

Next day, we started our arduous trek to ‘Tadiyandamol” peak. “Tadiyandamol” in Kodava language is “Highest Peak”. It is the highest peak in the Coorg district. Sturdy folks started to trek and frails rested in the cottage. We underestimate the distance and we didn’t carry any eatables and we took two empty 500ml water bottle. We wended along the coffee plantation for few miles. Coffee beans were waiting for the harvest.

The hill was covered in lush green and vegetation. We toiled up the hill in temperate climate. Anu and Saritha are photo maniac, where ever they saw the promontory they will portrait before the cyber-shot. I usually sprawl myself on these promontory for a while. In my dream I used to gaze my dream girl for hours. Similarly, I gazed the hill’s pastoral scene. Myriads of wild flowers were on both side of the valley. The team headed by Nikel reached the crest first and beckon on us. We were nearing the ridges and it was few miles away from us. “Tadiyandamol” peak was precipitous. I thought it was ladder to heaven and we were at the rungs of it. We crawled slowly and reached the peak. Drizzle welcomed us.

There is no substitute to god’s creature.

Posted by: brak | January 7, 2008

அரைப் பக்க சிறு கதை

வித்தியாவும், ப்ரியாவும் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு ஷாப்பிங் செய்ய தி. நகரிலுள்ள உஸ்மான் சாலைக்கு கிளம்பினார்கள். “ப்ரியா இன்னிக்கு எவ்வளவு பெட்” என்றாள் வித்தியா. அதற்கு ப்ரியா “முதல்ல நீ ஜெய்துக்காட்டு அதற்கு பிறகு பார்க்கலாம்” என்றாள்.  “ஸ்டிக்கர் பொட்டு அஞ்சி ரூபாய் … ஸ்டிக்கர் பொட்டு அஞ்சி ரூபாய்” என்று சாலை ஓரமாக கூவிக் கொண்டிருந்தார் ஒரு சிறு வியாபாரி.  ப்ரியா ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு பாக்கெட் ஸ்ட்டிக்கர் பொட்டு வாங்கிக் கொண்டாள்.  சற்று தூரம் அவர்கள் சென்றதும். “ப்ரியா இதோ பார்” என்று தன்னிடமுள்ள ஒரு ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை காட்டினாள் வித்தியா. “வாவ்… இன்னிக்குப் போட்டில நீ ஜெய்ச்சுட்டப் போ” என்றாள் ப்ரியா.   

அந்த ஸ்டிக்கர் பொட்டு வியாபாரி தன் சக வியாபரியிடம் “இன்னிக்கு முழுசா எல்லா பொட்டையும் வித்தா ஐம்பது ரூபாய் வராது.  அந்த இரண்டு பிள்ளையையும் பார்த்தா நல்லா படிச்சிருக்கவங்க மாதிரி இருக்காங்க, எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு ஒரு பாக்கெட் பொட்டை எடுத்துட்டாங்க.  நாலுப் பேருக்கு மத்தியில நான் கேட்டா அது அவங்களுக்கு அசிங்கமுன்னு விட்டுட்டேன்.  அஞ்சி ரூபாயில நான் என்ன கோட்டையா கட்டப் போறேன் சார்” என்று கூறிவிட்டு தன் வியாபாரத்தைத் தொடர்ந்தார்.

வித்தியா பெற்ற வெற்றி வியாபாரி அனுதாபப்பட்டு கொடுத்த வெற்றி.

சங்கித சுரங்கள் அதுவும் மூன்றே சுரங்கள்
இசை ஞாணி இளையராஜா மூன்றே சுரங்களில் இசையமைத்தப் பாடலின் சில வரிகள்…

பாடப் பிறந்தது பாட்டுத்தான்
எனது கூடப் பிறந்ததுப் பாட்டுத்தான்
வாழப் பிறந்ததுப் பாட்டுத்தான்
என் வாழ்க்கை முழுவதும் பாட்டுத்தான்
உலகெல்லாம் திசை பரவி உலவி வருவது எது இசையது
உயிரெல்லாம் நலம் பெற உதவிப் புரிவது எது இசையது
நோய்யைக் கூட தீர்த்து வைக்கும் ஓர் பாட்டு
தாய்யைப் போல தாலாட்டும் ஓர் பாட்டு…

பாடல் வரிகளைப் படித்ததுப் போதும் இனி ஷிரேயா கோஷலின் குரலில் தேன் சிந்தும் சுந்தர தெலுங்குப் பாடலை கீழே உள்ள வலைப் பின்னல் முகவரியை கிளிக் செய்து பார்த்து கேட்டு மகிழுங்கள்…

http://www.youtube.com/watch?v=EwGeHvOCxfQ&

Posted by: brak | December 14, 2007

விருந்தோம்பல்

ஞாயிறு போற்றும் … விருந்தினர் போற்றும்விருந்தினர் போற்றும்:

தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் ஆனந்த விகடனும் இணைந்து “விருந்தினர் போற்றும்” விழாவை சென்னையில் நடத்தினார்கள்.  

ஒரு நாட்டின் கலச்சாரத்தை பறைசாற்றும் தூண்களாக விளங்குபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.  இவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பதை சிறு நாடகங்கள் மூலமாக செய்துக் காண்பித்தனர் தமிழ் நாடு சுற்றுலாத்துறையினர்.  சுற்றுலாப் பயணிகளின் வரவால் ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதோடு மட்டுமில்லாமல் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது இவ்வற்றால் நம் வாழ்க்கைத் தரம் உயரும் என்று அவர்களுக்கு உணரும்படுயாக சொற்பொழிவாற்றினர் தமிழ் நாடு சுற்றுலாத்துறையினர்.   இறுதியாக ஆட்டோ ஒட்டுநர்களும், போர்டர்களும் சுற்றுலாப் பயணிகளிடம் நன்முறையிலும் நேர்மையான முறையிலும் நடந்துக் கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

      தமிழ் நாடு சுற்றுலாத்துறையினர் எடுத்துக் கொண்ட இம்முயற்சி பாராட்டக்கூடியது.  

தமிழின் முத்த தலைவர்:

      தமிழ் தமிழ் என்று மார்த்தட்டிக் கொள்ளும் மூத்த தலைவர் ஒருவர்,  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு வழங்கி, அவரின் பொருளாதரத்தை மேலும் வண்ணமயமாக்கிக் கொண்டார். இந்த பெரும் தொகையை இலவச தொலைக்காட்சி பெட்டிக்கு வழங்க செலவிட்டதற்குப் பதிலாக  புராதன கோயில்களை பாதுகாக்க, பராமரிக்க,பூங்கா அமைக்கப் பயண்படுத்தியிருக்கலாம் அல்லது மேலும் தமிழ் நாட்டின் கல்விக் கட்டமைப்பை மேலும் உயர்தியிருக்கலாம்.

Posted by: brak | November 20, 2007

Karwar Trip

Karwar Trip:

புறப்படுதல்:

ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 7.00 மணிக்கு கெம்ப கெளடா பேருந்து நிலையத்தில் பானாஜி செல்லும் பேருந்திற்காக நானும் என் சக அலுவலகத் தோழர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தோம்.  சரியாக மாலை 8.30 மணிக்கு   நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது.  எனக்கு ஒதுக்கப்பட்ட  இருக்கையில் அமர்ந்தேன்.  பேருந்து மெதுவாகப் பேருந்து நிலையத்திலிருந்து தவழத் தொடங்கியது. I-Podல் இளையாராஜாவின் பாடலை ரசித்தப்படியே உறங்கலானேன்.

கார்வார் சிறப்பு:

சுமார் 10 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கார்வாரை அடைந்தோம்.  கார்வார் கர்நாடக மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.  இது உத்தர கன்னாடா மாவட்டத்தின் தலைநகரமாகும். பெங்கலூரிலிருந்து சுமார் 540 கி.மீ தொலைவிலுள்ளது.   இது கோவாவிற்கு  மிக அருகாமையில் அமைந்துள்ளது.  கிரானைட் கற்கள் கார்வார் துறைமுகத்திலிருந்து பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  மீன்பிடித்தல் இவ்வூரின் பிரதான தொழிலாகும்.  கார்வார் துறைமுகத்திலிருந்து சுமார் 20 நிமிட கப்பல் பயணத்திற்குப்  பிறகு “குரும்கட்” என்ற மலை தீவிலுள்ள  “தி கிரேட் அவுட் டோர்ஸ் ஐலாண்ட் ரிசார்ட்” என்ற  கேளிக்கை விடுதியை சென்றடைந்தோம்.

கிரேட் அவுட் டோர்ஸ் ஐலாண்ட் ரிசார்ட்:

இக் கேளிக்கை விடுதிக்கு ஜென்ரேட்டர் மூலமாகதான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.  இவ்விடுதியில் மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட நான்கு தங்கும் அறைகளும்  மூன்று பெரிய கூடாரமும்  இருந்தது.  இவ்விடுதியில் ஒரு நாளைக்கு நபர் ஒன்றுக்கு  ரூ.1600 கட்டணமாக வசுலிக்கப்படுகிறது.

மலையேற்றம், மீன்பிடித்தல்,  படகுச் சவாரி போன்ற  பல சாகச விளையாட்டுக்களும் இங்கு உண்டு.  மாரிக் காலமாகயிருந்ததால்  கடலின் சிற்றம் சற்று அதிகமாயிருந்தது.  இவ்விடுதியில்  பரிமாறப்பட்ட உணவு மிகவும் சுவையானதாகயிருந்தது.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடாரத்தில் எங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துவிட்டு கடற்கரைக்குச் சென்றோம்.  கடற்கரையில், அடைமழையிலும் வீடாமல் கைப் பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடினோம்.  பிறகு  மலையேற்றத்திற்கு தயாரானோம்.  மலையின் உச்சியை அடைந்தோம்.  மேற்குத் தொடர்சி மலையின் பசுமையும்,மேகங்கள்  மலையை தழுவிச் செல்லும் காட்சியும் மிகவும் அருமையாகயிருந்தது.     

மறுநாள் படகுச் சவாரி மூலம் டால்பின் இருக்குமிடத்திற்கு  அழைத்துச் சென்றார்கள்.  டிஸ்கவரிச் சேனலில் வருவதுப் போல் டால்பின்கள் துல்லும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் டால்பின்களோ லேசாக தன் தலையை மட்டும் காண்பித்துச் சென்றது.  மிகப்  பெரியக் கப்பல் ஒன்று பாறையால் அடிப்பட்டு இரண்டு துண்டாக உடைந்திருந்ததை கண்டோம். படகின் மூலம் தீவின் அழகை ரசித்தைப் படியே தீவை வலம் வந்தோம். மழை அதிகமாக இருக்கும் போது கூடாரத்தில் ஆட்டம் பாட்டம் தான்.

அடுத்தப் பயணம்:

ஜூன் முதல் அக்டோபர் வரை  பெரும்பாலான கேளிக்கை விடுதிகள் மூடப்படுகிறது.  சுற்றாலாவிற்கு டிசம்பர் மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கும் .  கடற்கரை நீர் தெளிவாக இல்லை.   கோவாவைப் போல் பறந்த மணற்பரப்பு இல்லாததால் விளையாடுவதற்கு சற்று கடினமாக இருந்தது.  இவ்விடுதியில்  அசைவம் மற்றும் சைவ உணவு மிகவும் சுவையாக இருந்தது. 

“குரும்கட்” தீவிலிருந்து மாலை 6 மணிக்கு விடைப்பெற்று கார்வார் துறைமூகத்தை அடைந்தோம்.  பெங்கலூர் அடைவதற்குள் நாங்கள் அடுத்த பயணத்தைப் பற்றி பேருந்தில் விவாதித்து அதற்கான இடத்தைத் தேர்வு செய்தோம். 

  

Posted by: brak | August 29, 2007

ஹவாலா ஒரு பார்வை

ஒரு வழியாக Production Bugயை விரைவாக fix செய்த திருப்தியில் Ctl+Alt+Del அழுத்திவிட்டு, “I left the office, will reach there within 5 mins. Come quick” என்று என் நண்பனுக்கு SMS அனுப்பிவிட்டு சரியாக மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பினேன்.  வீட்டு வாசலில் நண்பனின் வருகைக்காக காத்திருந்தேன். லேசாக பசியெடுப்பது போன்ற உணர்வு. அருகாமையில் உள்ள டீக்கடைக்குச் சென்று ஒரு துண்டு காகிதத்தில் இரண்டு சூடான மிளகாய் பஜ்ஜி எடுத்து வைத்துக் கொண்டேன். அந்த இனிய மாலைப் பொழுது பஜ்ஜியின் சுவையை சுவைத்தபடியே கண்களுக்கும் விருந்தாக அமைந்தது மாருதிநகர் .( மாருதிநகர் -பிற மாநிலத்திலிருந்து பணிநிமித்தமாக வந்துள்ள பெண் கணிப் பொறியாளர்கள் தங்கிருக்கும் விடுதிகள் நிறைந்த இடம்).

ஹவாலா” என்றால் என்ன?

“ஹவாலா மோசடியில் இருவர் பிடிப்பட்டனர்” என்ற ஒரு செய்தி அந்த பழைய துண்டு காகிதத்தில் இருந்தது. அதைப் படித்தவுடன் என் நினைவிற்கு முதலில் வந்தது “ஹர்சத் மேத்தா” தான். 

பள்ளிப் பருவத்தில் செய்திவாசிப்பாளாராக இருந்த பொழுது அடிக்கடி அடிபட்ட வார்த்தை. “ஹவாலா” என்றால் என்ன? என்று நான் என்னுள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்கான தீவிர தேடுதலில்  இறங்கினேன்.  நான் வேட்டையாடிய சிலவற்றை இந்தப் பதிவறையில் பதிவு செய்துள்ளேன்.

      நிழல் உலகில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைக்கு “ஹவாலா” என்று அழைக்கப்படுகிறது. அவற்றைக் கையாளுபவரர்களுக்கு “ஹவாலாதாரர்” என்று அழைக்கப்படுகிறார்கள்.  அரபிய மொழியில் “ஹவாலா” என்றால் பரிமாற்றம் என்பது பொருளாகும்.   பண்டைய காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்யும் போது வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து தங்கள் பொன் மற்றும் பொருளைப் பாதுகாக்க  மாற்றிக் கொண்ட பரிமாற்ற முறையை இன்று கால மாற்றத்திற்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி செய்யும் பணப் பரிவர்த்தனையே ஹவாலாவாகும்.

நிகழ்வு

ஒருவர் அமெரிக்காவில் வேலைப் பார்க்கிறார்,  இந்தியாவில் உள்ள தன் வீட்டிற்கு அவசரமாக ஒரு இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது.  விரைவு காசோலை எடுத்து அனுப்பலாம் என்று முடிவு செய்து வங்கிற்குச் செல்கிறார். அங்கு எதேச்சையாக தன் பாலிய காலத்து நண்பனை சந்திக்க நேரிடுகிறது.  வீட்டிற்குப் பணம் அவசரமாக தேவைப்படுகிறது. விரைவு காசோலை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தேன் என்று தன் நண்பனிடம் கூறுகிறார்.  நீங்கள் விரைவு காசோலை எடுத்து அனுப்பினால் அது பணமாக மாற குறைந்தது 20 நாட்களாவது ஆகுமே என்றார் அந்த நண்பர்.  பணத்தை உங்கள் வீட்டிற்கு அனுப்ப இதைவிட ஒரு சிறந்த வழியை சொல்லட்டமா என்று கூறி ஒரு பிரபல அமெரிக்க வங்கியின் கணக்கு எண்னைக் கொடுத்து இதில் பணத்தை போடுமாறு கூறினார்.  இவரும் தன் கணக்கிலிருந்து நண்பர் கொடுத்த கணக்கிற்கு பணத்தை E-Transfer செய்தார்.

தன் நன்பர் ஒரு ரகசிய எண்னைக் கொடுத்து  நாளை பணம் வந்துக் கொடுப்பவரிடம் இந்த ரகசிய எண்ணைக் கொடுக்குமாறு கூறினார்.  இவர் ரகசிய எண்ணையும் பணம் பெறும் முறையையும் தன் தாயாரிடம் விளக்கினார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்கள் பணம்  உங்கள் வீட்டிற்கே சென்றடையும் என்று கூறி தன்னுடைய visiting cardஐ கொடுத்து விடைப் பெற்றார் அந்த நண்பர்.

அன்று இரவு இந்தியாவிலுள்ள தன் விட்டிலிருந்து அலைப்பேசியில் அழைப்பு ஒலித்தது.    அசோக் எப்படி பா இருக்க? நல்லாயிருக்கியா? “நீ பணம் கொடுக்கச் சொன்னதாக கூறி ஒருவர் ஒரு இலட்சம் கொடுத்துட்டுப்போனாருப்பா” என்றார் அசோக்கின் தாயார்.  இதைக் கேட்டவுடன் அன்றிலிருந்து அவன் இம்முறையில் பணத்தை பறிமாற்றினான்.  இம்முறையில் நிறைய பேர் பணத்தைப் பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்துகிறார்கள்.  இச்செயல் சட்ட விரோதம் என்பதையாறும் பொருட்படுத்தவில்லை. அனைவரும் தன் சுய இலாபத்திற்காகவே இதைச் செய்கின்றனர்.

புள்ளியல் விவரம்

இந்தியாவில் மட்டும் சுமார் 4000 ஹாவாலாதாரர்கள் இருப்பதாக ஒரு புள்ளியல் ஆய்வு கூறுகிறது.  இதில் 80 விழுக்காடு ஹாவாலாதாரர்கள் மும்பையில் உள்ளனர். பொதுவாக  forex exchange நடத்துப்பவர்கள் அல்லது அதில் பணியாற்றுபவர்களே ஹாவாலாதாரர்களாக இருப்பதாக  ஒரு செய்தி.  இவர்கள் செய்யும் தொழில் சட்ட விரோதச் செயலாக இருக்கலாம். ஆனால் இவர்கள் இத்தொழிலை நேர்மையாகச்  செய்கிறார்களாம்.   பணத்தை  சொல்லும் இடத்திற்கு சரியான நேரத்தில் சரியாகக் கொண்டு சேர்க்கின்றனர்.    வெளிநாட்டுப் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. உள்நாட்டுப் பண பரிவர்த்தனைக்கு  வங்கியைக் காட்டிலும் மிகக் குறைவாகவே வசூலிக்கின்றனர்.  சரி, இவ்வாறு வெளிநாட்டுப் பண பரிவர்த்தனையை கட்டணமின்றி செய்வதால் இவர்களுக்கு என்ன இலாபம்? 

இவர்கள் பணத்திற்குப் பதிலாக ஆயுதம் மற்றும் சட்ட விரோதப் பொருட்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.  

நான் சேகரித்த தகவலை உங்களுடன் பரிமாறிக் கொண்டேன்.

Posted by: brak | August 25, 2007

Slide Show Testing …

 இந்தியாவில் நுகர்வோர் வர்த்தகத்தில் முன்னனி நிறுவணமான இந்துஸ்தான் லிவர் லிமிட்டட்டு,  இந்தியாவின் தூய்மையான நகரத்தின் தரத்தை ஆய்வு  செய்யுமாறு ஏல்.சி நில்சன் – ஓ.ஆர்.ஜி மார்கு நிறுவணத்திடம் ஒப்படைத்தது. இவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலதின் தலைநகரத்தையும் ஆய்வு செய்தது. இதில் சண்டிகர் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் உள்ள ஆறு மெட்ரோக்களில் சென்னைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக பெங்கலூர் இடம் பெறுகிறது.
இவர்கள் சென்னைக்கு வழங்கிய மதிப்பிட்டின் அளவு 118 புள்ளிகள்.

குப்பையை அகற்றுதல், குப்பைத் தொட்டியை நிறுவுதல், குப்பையை அகற்ற ஏடுத்துக்கொள்ளும் கால அவகாதம் இவையெனைத்தும் மதிப்பிட்டில் அடுங்கும்.

Posted by: brak | May 18, 2007

உன்னாலே உன்னாலே

நடிப்பு       : வினைய்(கார்த்திக்),சதா(ஜான்சி), தனிஷ்ஷா(திப்பிக்கா)….

இயக்கம்     : ஜீவா

இசை          :ஷாரிஷ் ஜெயராஜ்

தயாரிப்பு     :ஆஸ்கார் ரவிச்சந்திரன்

பத்து விரல்களும் ஒன்றைப் போலிருப்பதில்லை, அனணவரின் சிந்தனையும்,ரசணையும் அவ்வாறே.  சிலருக்கு இப்படம் பிடித்திருக்கும் பலருக்கு இப்படம் பிடிக்காமல் போயிருக்கும்.    

கார்த்திக், ஜான்சி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள்.  கார்த்திக் ஒரு கலகலப்பான வாலிபன், அவன் பலப் பெண்களுடன் நட்பு ரீதியில் பழகுவதை ஜான்சிக்குப் பிடிக்காததால் அவர்களுக்கிடையே ஊடல் எற்பட்டு இருவரும் பிரிகிண்றனர்.  கார்த்திக் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்ல நேரிடுகிறது, ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணிக்குப் போது சகப் பயணியாக திப்பிக்கா அறிமுகமாகிறார்.  அங்கு சென்றதும் திப்பிக்காவை அழைத்துச் செல்ல அவளது அலுவலகத் தோழியான ஜான்சியை மீண்டும் விமான நிலையத்தில் சந்திக்கிறார் கார்த்திக்.  மீண்டும் அவன் ஜான்சியைப் பின் தொடருகிறான். அவள், தான் கார்த்திக்கை வெறுப்பாதாக உதட்டளவில் கூறினாலும் மனதளவில் மிகவும் காதலித்தாள். 

திப்பிக்கா, கார்த்திக் மற்றும் ஜான்சியின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்.   ஜான்சி கார்த்திக்கைப் புரிந்துக்கொண்டு தன் காதலை வெளிப்படுத்த சற்று கால அவகசம் எடுத்துக் கொள்வதற்குள், திப்பிக்கா தன் காதலை கார்த்திக்கிடம் சொல்ல இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

கார்த்திக் பெண்களுடன் நட்பு ரீதியில் பழகுவதை சந்தேகத்துடன் ஜான்சி பார்ப்பதால், அவர்களுக்கிடையே ஊடல் எற்பட்டுகிறது.

 இயக்குனர்  கதாநாயகனின் செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்.  ஜான்சி கார்த்திக் மீது கொண்டுள்ள பொசசிவ்னஸ்சை(possessiveness) நியாயப்படுத்தியிருக்கிலாம்.  ப முதல்  பா வரை ( படுக்கை முதல் பாத்ரூம் வரை) நம் உதடுகளை முனு முனுக்க வைத்துள்ளார் இசையமைப்பாளார் ஷாரிஷ் ஜெயராஜ். பின்னனியிசையும் அருமையாக உள்ளது. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் அருமை.

உன்னாலே உன்னாலே :  Passenger Train….

காதல் இனிமை,தியாகம் அதனினும் இனிமையாம்

Posted by: brak | May 18, 2007

நான் அவன் இல்லை

ச்ச.. இதுயெல்லாம் ஒருப் படம் அதற்கு ஒரு விமர்சணம் தயவுசெய்து உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துங்கள்.

 நான் அவன் இல்லை :- தேங்காய் மட்ட

Older Posts »

Categories