நடிப்பு : வினைய்(கார்த்திக்),சதா(ஜான்சி), தனிஷ்ஷா(திப்பிக்கா)….
இயக்கம் : ஜீவா
இசை :ஷாரிஷ் ஜெயராஜ்
தயாரிப்பு :ஆஸ்கார் ரவிச்சந்திரன்
பத்து விரல்களும் ஒன்றைப் போலிருப்பதில்லை, அனணவரின் சிந்தனையும்,ரசணையும் அவ்வாறே. சிலருக்கு இப்படம் பிடித்திருக்கும் பலருக்கு இப்படம் பிடிக்காமல் போயிருக்கும்.
கார்த்திக், ஜான்சி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். கார்த்திக் ஒரு கலகலப்பான வாலிபன், அவன் பலப் பெண்களுடன் நட்பு ரீதியில் பழகுவதை ஜான்சிக்குப் பிடிக்காததால் அவர்களுக்கிடையே ஊடல் எற்பட்டு இருவரும் பிரிகிண்றனர். கார்த்திக் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்ல நேரிடுகிறது, ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணிக்குப் போது சகப் பயணியாக திப்பிக்கா அறிமுகமாகிறார். அங்கு சென்றதும் திப்பிக்காவை அழைத்துச் செல்ல அவளது அலுவலகத் தோழியான ஜான்சியை மீண்டும் விமான நிலையத்தில் சந்திக்கிறார் கார்த்திக். மீண்டும் அவன் ஜான்சியைப் பின் தொடருகிறான். அவள், தான் கார்த்திக்கை வெறுப்பாதாக உதட்டளவில் கூறினாலும் மனதளவில் மிகவும் காதலித்தாள்.
திப்பிக்கா, கார்த்திக் மற்றும் ஜான்சியின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். ஜான்சி கார்த்திக்கைப் புரிந்துக்கொண்டு தன் காதலை வெளிப்படுத்த சற்று கால அவகசம் எடுத்துக் கொள்வதற்குள், திப்பிக்கா தன் காதலை கார்த்திக்கிடம் சொல்ல இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
கார்த்திக் பெண்களுடன் நட்பு ரீதியில் பழகுவதை சந்தேகத்துடன் ஜான்சி பார்ப்பதால், அவர்களுக்கிடையே ஊடல் எற்பட்டுகிறது.
இயக்குனர் கதாநாயகனின் செயலை நியாயப்படுத்தியிருக்கிறார். ஜான்சி கார்த்திக் மீது கொண்டுள்ள பொசசிவ்னஸ்சை(possessiveness) நியாயப்படுத்தியிருக்கிலாம். ப முதல் பா வரை ( படுக்கை முதல் பாத்ரூம் வரை) நம் உதடுகளை முனு முனுக்க வைத்துள்ளார் இசையமைப்பாளார் ஷாரிஷ் ஜெயராஜ். பின்னனியிசையும் அருமையாக உள்ளது. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் அருமை.
உன்னாலே உன்னாலே : Passenger Train….
காதல் இனிமை,தியாகம் அதனினும் இனிமையாம்




வாழ்த்துக்கள் பிரகதீஷ்.
தொடர்ந்து எழுதுங்கள்.
By: vizhiyan on May 18, 2007
at 9:10 am