ஒரு வழியாக Production Bugயை விரைவாக fix செய்த திருப்தியில் Ctl+Alt+Del அழுத்திவிட்டு, “I left the office, will reach there within 5 mins. Come quick” என்று என் நண்பனுக்கு SMS அனுப்பிவிட்டு சரியாக மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பினேன். வீட்டு வாசலில் நண்பனின் வருகைக்காக காத்திருந்தேன். லேசாக பசியெடுப்பது போன்ற உணர்வு. அருகாமையில் உள்ள டீக்கடைக்குச் சென்று ஒரு துண்டு காகிதத்தில் இரண்டு சூடான மிளகாய் பஜ்ஜி எடுத்து வைத்துக் கொண்டேன். அந்த இனிய மாலைப் பொழுது பஜ்ஜியின் சுவையை சுவைத்தபடியே கண்களுக்கும் விருந்தாக அமைந்தது மாருதிநகர் .( மாருதிநகர் -பிற மாநிலத்திலிருந்து பணிநிமித்தமாக வந்துள்ள பெண் கணிப் பொறியாளர்கள் தங்கிருக்கும் விடுதிகள் நிறைந்த இடம்).
ஹவாலா” என்றால் என்ன?
“ஹவாலா மோசடியில் இருவர் பிடிப்பட்டனர்” என்ற ஒரு செய்தி அந்த பழைய துண்டு காகிதத்தில் இருந்தது. அதைப் படித்தவுடன் என் நினைவிற்கு முதலில் வந்தது “ஹர்சத் மேத்தா” தான்.
பள்ளிப் பருவத்தில் செய்திவாசிப்பாளாராக இருந்த பொழுது அடிக்கடி அடிபட்ட வார்த்தை. “ஹவாலா” என்றால் என்ன? என்று நான் என்னுள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்கான தீவிர தேடுதலில் இறங்கினேன். நான் வேட்டையாடிய சிலவற்றை இந்தப் பதிவறையில் பதிவு செய்துள்ளேன்.
நிழல் உலகில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைக்கு “ஹவாலா” என்று அழைக்கப்படுகிறது. அவற்றைக் கையாளுபவரர்களுக்கு “ஹவாலாதாரர்” என்று அழைக்கப்படுகிறார்கள். அரபிய மொழியில் “ஹவாலா” என்றால் பரிமாற்றம் என்பது பொருளாகும். பண்டைய காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்யும் போது வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து தங்கள் பொன் மற்றும் பொருளைப் பாதுகாக்க மாற்றிக் கொண்ட பரிமாற்ற முறையை இன்று கால மாற்றத்திற்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி செய்யும் பணப் பரிவர்த்தனையே ஹவாலாவாகும்.
நிகழ்வு
ஒருவர் அமெரிக்காவில் வேலைப் பார்க்கிறார், இந்தியாவில் உள்ள தன் வீட்டிற்கு அவசரமாக ஒரு இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. விரைவு காசோலை எடுத்து அனுப்பலாம் என்று முடிவு செய்து வங்கிற்குச் செல்கிறார். அங்கு எதேச்சையாக தன் பாலிய காலத்து நண்பனை சந்திக்க நேரிடுகிறது. வீட்டிற்குப் பணம் அவசரமாக தேவைப்படுகிறது. விரைவு காசோலை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தேன் என்று தன் நண்பனிடம் கூறுகிறார். நீங்கள் விரைவு காசோலை எடுத்து அனுப்பினால் அது பணமாக மாற குறைந்தது 20 நாட்களாவது ஆகுமே என்றார் அந்த நண்பர். பணத்தை உங்கள் வீட்டிற்கு அனுப்ப இதைவிட ஒரு சிறந்த வழியை சொல்லட்டமா என்று கூறி ஒரு பிரபல அமெரிக்க வங்கியின் கணக்கு எண்னைக் கொடுத்து இதில் பணத்தை போடுமாறு கூறினார். இவரும் தன் கணக்கிலிருந்து நண்பர் கொடுத்த கணக்கிற்கு பணத்தை E-Transfer செய்தார்.
தன் நன்பர் ஒரு ரகசிய எண்னைக் கொடுத்து நாளை பணம் வந்துக் கொடுப்பவரிடம் இந்த ரகசிய எண்ணைக் கொடுக்குமாறு கூறினார். இவர் ரகசிய எண்ணையும் பணம் பெறும் முறையையும் தன் தாயாரிடம் விளக்கினார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்கள் பணம் உங்கள் வீட்டிற்கே சென்றடையும் என்று கூறி தன்னுடைய visiting cardஐ கொடுத்து விடைப் பெற்றார் அந்த நண்பர்.
அன்று இரவு இந்தியாவிலுள்ள தன் விட்டிலிருந்து அலைப்பேசியில் அழைப்பு ஒலித்தது. அசோக் எப்படி பா இருக்க? நல்லாயிருக்கியா? “நீ பணம் கொடுக்கச் சொன்னதாக கூறி ஒருவர் ஒரு இலட்சம் கொடுத்துட்டுப்போனாருப்பா” என்றார் அசோக்கின் தாயார். இதைக் கேட்டவுடன் அன்றிலிருந்து அவன் இம்முறையில் பணத்தை பறிமாற்றினான். இம்முறையில் நிறைய பேர் பணத்தைப் பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்துகிறார்கள். இச்செயல் சட்ட விரோதம் என்பதையாறும் பொருட்படுத்தவில்லை. அனைவரும் தன் சுய இலாபத்திற்காகவே இதைச் செய்கின்றனர்.
புள்ளியல் விவரம்
இந்தியாவில் மட்டும் சுமார் 4000 ஹாவாலாதாரர்கள் இருப்பதாக ஒரு புள்ளியல் ஆய்வு கூறுகிறது. இதில் 80 விழுக்காடு ஹாவாலாதாரர்கள் மும்பையில் உள்ளனர். பொதுவாக forex exchange நடத்துப்பவர்கள் அல்லது அதில் பணியாற்றுபவர்களே ஹாவாலாதாரர்களாக இருப்பதாக ஒரு செய்தி. இவர்கள் செய்யும் தொழில் சட்ட விரோதச் செயலாக இருக்கலாம். ஆனால் இவர்கள் இத்தொழிலை நேர்மையாகச் செய்கிறார்களாம். பணத்தை சொல்லும் இடத்திற்கு சரியான நேரத்தில் சரியாகக் கொண்டு சேர்க்கின்றனர். வெளிநாட்டுப் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. உள்நாட்டுப் பண பரிவர்த்தனைக்கு வங்கியைக் காட்டிலும் மிகக் குறைவாகவே வசூலிக்கின்றனர். சரி, இவ்வாறு வெளிநாட்டுப் பண பரிவர்த்தனையை கட்டணமின்றி செய்வதால் இவர்களுக்கு என்ன இலாபம்?
இவர்கள் பணத்திற்குப் பதிலாக ஆயுதம் மற்றும் சட்ட விரோதப் பொருட்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
நான் சேகரித்த தகவலை உங்களுடன் பரிமாறிக் கொண்டேன்.




Bragi kalakitheenga ponga…
By: Raveendran on August 30, 2007
at 7:19 am
கருப்புப்பணத்தை வெள்ளாயாக்க இது ஒரு சுலபமான வழி என்பதையும் சொல்லி இருக்கலாம்.
நம்ம சிவாஜி படம் வந்ததும் இந்த ஹவாலா ட்ரிக் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது.
ஆனால், இப்படி இந்தியாவில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு உருப்படியான வரவு, செலவும் செய்ய முடியாது என்றும் சொல்லவேண்டும். ஏனென்றால், அதுவும் கணக்கில் வராத பணமாகத்தான் இருக்கும்.
நன்றி
By: ஜயராமன் on August 30, 2007
at 10:17 am
What is Hawala? You could have messaged me immediately and I could have briefed you on that. Anyways u have taken a lot of efforts to produce such an informative article in the form of a blog. I appreciate your interest in writing.
Article really good – INFORMATIVE.
Keep up the good work…
By: Ravi on August 30, 2007
at 5:58 pm