Karwar Trip:
புறப்படுதல்:
ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 7.00 மணிக்கு கெம்ப கெளடா பேருந்து நிலையத்தில் பானாஜி செல்லும் பேருந்திற்காக நானும் என் சக அலுவலகத் தோழர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தோம். சரியாக மாலை 8.30 மணிக்கு நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து மெதுவாகப் பேருந்து நிலையத்திலிருந்து தவழத் தொடங்கியது. I-Podல் இளையாராஜாவின் பாடலை ரசித்தப்படியே உறங்கலானேன்.
கார்வார் சிறப்பு:
சுமார் 10 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கார்வாரை அடைந்தோம். கார்வார் கர்நாடக மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது உத்தர கன்னாடா மாவட்டத்தின் தலைநகரமாகும். பெங்கலூரிலிருந்து சுமார் 540 கி.மீ தொலைவிலுள்ளது. இது கோவாவிற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. கிரானைட் கற்கள் கார்வார் துறைமுகத்திலிருந்து பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்பிடித்தல் இவ்வூரின் பிரதான தொழிலாகும். கார்வார் துறைமுகத்திலிருந்து சுமார் 20 நிமிட கப்பல் பயணத்திற்குப் பிறகு “குரும்கட்” என்ற மலை தீவிலுள்ள “தி கிரேட் அவுட் டோர்ஸ் ஐலாண்ட் ரிசார்ட்” என்ற கேளிக்கை விடுதியை சென்றடைந்தோம்.
கிரேட் அவுட் டோர்ஸ் ஐலாண்ட் ரிசார்ட்:
இக் கேளிக்கை விடுதிக்கு ஜென்ரேட்டர் மூலமாகதான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இவ்விடுதியில் மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட நான்கு தங்கும் அறைகளும் மூன்று பெரிய கூடாரமும் இருந்தது. இவ்விடுதியில் ஒரு நாளைக்கு நபர் ஒன்றுக்கு ரூ.1600 கட்டணமாக வசுலிக்கப்படுகிறது.
மலையேற்றம், மீன்பிடித்தல், படகுச் சவாரி போன்ற பல சாகச விளையாட்டுக்களும் இங்கு உண்டு. மாரிக் காலமாகயிருந்ததால் கடலின் சிற்றம் சற்று அதிகமாயிருந்தது. இவ்விடுதியில் பரிமாறப்பட்ட உணவு மிகவும் சுவையானதாகயிருந்தது.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடாரத்தில் எங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துவிட்டு கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையில், அடைமழையிலும் வீடாமல் கைப் பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடினோம். பிறகு மலையேற்றத்திற்கு தயாரானோம். மலையின் உச்சியை அடைந்தோம். மேற்குத் தொடர்சி மலையின் பசுமையும்,மேகங்கள் மலையை தழுவிச் செல்லும் காட்சியும் மிகவும் அருமையாகயிருந்தது.
மறுநாள் படகுச் சவாரி மூலம் டால்பின் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். டிஸ்கவரிச் சேனலில் வருவதுப் போல் டால்பின்கள் துல்லும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் டால்பின்களோ லேசாக தன் தலையை மட்டும் காண்பித்துச் சென்றது. மிகப் பெரியக் கப்பல் ஒன்று பாறையால் அடிப்பட்டு இரண்டு துண்டாக உடைந்திருந்ததை கண்டோம். படகின் மூலம் தீவின் அழகை ரசித்தைப் படியே தீவை வலம் வந்தோம். மழை அதிகமாக இருக்கும் போது கூடாரத்தில் ஆட்டம் பாட்டம் தான்.
அடுத்தப் பயணம்:
ஜூன் முதல் அக்டோபர் வரை பெரும்பாலான கேளிக்கை விடுதிகள் மூடப்படுகிறது. சுற்றாலாவிற்கு டிசம்பர் மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கும் . கடற்கரை நீர் தெளிவாக இல்லை. கோவாவைப் போல் பறந்த மணற்பரப்பு இல்லாததால் விளையாடுவதற்கு சற்று கடினமாக இருந்தது. இவ்விடுதியில் அசைவம் மற்றும் சைவ உணவு மிகவும் சுவையாக இருந்தது.
“குரும்கட்” தீவிலிருந்து மாலை 6 மணிக்கு விடைப்பெற்று கார்வார் துறைமூகத்தை அடைந்தோம். பெங்கலூர் அடைவதற்குள் நாங்கள் அடுத்த பயணத்தைப் பற்றி பேருந்தில் விவாதித்து அதற்கான இடத்தைத் தேர்வு செய்தோம்.




Better paste some photos which taken in this trip …
By: Prakash M on November 28, 2007
at 7:02 am