Posted by: brak | December 14, 2007

விருந்தோம்பல்

ஞாயிறு போற்றும் … விருந்தினர் போற்றும்விருந்தினர் போற்றும்:

தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் ஆனந்த விகடனும் இணைந்து “விருந்தினர் போற்றும்” விழாவை சென்னையில் நடத்தினார்கள்.  

ஒரு நாட்டின் கலச்சாரத்தை பறைசாற்றும் தூண்களாக விளங்குபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.  இவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பதை சிறு நாடகங்கள் மூலமாக செய்துக் காண்பித்தனர் தமிழ் நாடு சுற்றுலாத்துறையினர்.  சுற்றுலாப் பயணிகளின் வரவால் ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதோடு மட்டுமில்லாமல் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது இவ்வற்றால் நம் வாழ்க்கைத் தரம் உயரும் என்று அவர்களுக்கு உணரும்படுயாக சொற்பொழிவாற்றினர் தமிழ் நாடு சுற்றுலாத்துறையினர்.   இறுதியாக ஆட்டோ ஒட்டுநர்களும், போர்டர்களும் சுற்றுலாப் பயணிகளிடம் நன்முறையிலும் நேர்மையான முறையிலும் நடந்துக் கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

      தமிழ் நாடு சுற்றுலாத்துறையினர் எடுத்துக் கொண்ட இம்முயற்சி பாராட்டக்கூடியது.  

தமிழின் முத்த தலைவர்:

      தமிழ் தமிழ் என்று மார்த்தட்டிக் கொள்ளும் மூத்த தலைவர் ஒருவர்,  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு வழங்கி, அவரின் பொருளாதரத்தை மேலும் வண்ணமயமாக்கிக் கொண்டார். இந்த பெரும் தொகையை இலவச தொலைக்காட்சி பெட்டிக்கு வழங்க செலவிட்டதற்குப் பதிலாக  புராதன கோயில்களை பாதுகாக்க, பராமரிக்க,பூங்கா அமைக்கப் பயண்படுத்தியிருக்கலாம் அல்லது மேலும் தமிழ் நாட்டின் கல்விக் கட்டமைப்பை மேலும் உயர்தியிருக்கலாம்.


Leave a response

Your response:

Categories