சித்திரங்களின் விசித்திரங்கள்: நவின ஒவியத்தின் அறிமுகம்

தி தாமஸ் கிரோன் அபேயர் (The Thomas Crown Affair) என்ற திரைப்படத்தில் கிளப்டோமேனியா சுபாவம் கொண்ட பியர்ஸ் புரோஸ்சனன், கலைக் கூடத்திலுள்ள ஒரு ஓவியத்தை திருடுவான், பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த ஓவியம் அவனிடமிருந்து மீட்கப்பட்டாதா இல்லையா? என்பதே கதை.  ஒரு ஒவியத்தின் மதிப்பு இவ்வளவு காசா? அதில் என்ன இருக்கு? போன்ற கேள்விகள் என் மண்டடையில் கரப்பான் பூச்சி ஓடுவதுப் போல ஓடின.  அதற்கான விடையைத் தேடாமல் கிடப்பில் போட்டுவிட்டேன்.

நான் முதன் முதலாகப் பார்த்த கலைக்கூடம் தில்லிலுள்ள தேசியக் கலைக்கூடம் (National Art Gallery). இந்த கலைக்கூடம், ஓவியத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டிவிட்டது. அதன் பிறகு, இணையத்தில் வீதி உலா வருகையில் உயிர்மை பதிப்பக வீதியில் நான் கண்டேடுத்த மணிக்கம் தான் எஸ்.ரா வின் சித்திரங்களின் விசித்திரங்கள், நவின ஓவியம் குறித்த அறிமுக நூல். தீராநதியில் கட்டுரைகளாக வெளிவந்து, நூல் வடிவில் உயிர்மை பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் சிறந்த ஓவியனின் வாழ்கை வரலாறு, அவர்கள் வரைந்த ஓவியத்தின் சிறப்பு அம்சங்களையும், அவர்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஓவியன் வான்கோ, பால் காகின், பிரைடா கோலோ, ஜோர்கன் வெர்மெர் அகியோரின் வாழ்க்கை வாசிக்கும் போது, அவர்களது வாழ்கையை துன்பத்திற்காகவே அர்பணிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். வறுமையும் தனிமையும் அவர்களை மனநோயாலியாக்கியது. பதினெழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வெர்மெரின் ஓவியம் சமீபத்தில் ரூ.96 கோடிக்கு ஏலம் போனது. ஆனால் வெர்மெரோ நிறங்களைக்கூட வாங்க முடியாமல் கடனாலியாக வலம் வந்தார்.

அடிமன வெளிப்பாட்டிய(Surrealism) ஒவியத்தின் முன்னோடியாக கருதப்பட்டவர்கள் பாபிலோ பிகாசோ மற்றும் சல்வாடர் டாலி. பாபிலோ பிகாசோ நடித்த தி மிஸ்டரி அஃப் பிகாசோ திரைப்படம் தனித்துவமிக்கது. 1984 ஆம் ஆண்டு பிரென்ச் அரசாங்கம் இத்திரைப்படத்தை தேசத்தின் புதையல் என்று அறிவித்தது. இவர்களின் ஓவியம் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. இவர்களது ஓவியம் இப்போது என் கணிணியின் வால்பேப்பரானது.

பொதுவாக நவின ஓவியத்தின் நதிமூலம், ரிஷிமூலம் ஆராயமல் அதை உணரும் போது அது மதிப்பிட முடியாத ஓவியமாகிறது.

Advertisement

One Response to சித்திரங்களின் விசித்திரங்கள்: நவின ஒவியத்தின் அறிமுகம்

  1. தொடர்ந்து எழுது. எழுத எழுத எழுத்து சிறக்கும் மச்சி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s