தி டிவிட்ஸ் (The Twits) : ரூவால் டால் (Roald Dahl)

Cross Word புத்தகக் கடைக்குள் நுழைந்தவுடன் கண்ணில் பட்ட  புத்தகம் “1001 Movies You Must See Before You Die”. நான், “1001 Books You Must Read Before You Die” அப்படி ஒரு புத்தகம் இருக்குமா எனத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. “101 Books To Read Before You die” என்று இனணயத்தில் தேடும் போது ஒரு வளைப்பதிவில் ரூவால் டாலின் குழந்தைகளுக்கான அனைத்துப் புத்தகங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றில், தி டிவிட்ஸ் என்ற புத்தகத்தை நான் வாசித்து முடித்தவுடன், டாலின் அனைத்துப்
புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

டால் ஒரு பிரிட்டிஷ் நாவலாசிரியர் என்பதானல் அவரது பெயரை “ரோஅல்டு டால்”  என்று தவறாகப் உச்சரித்தேன்.  அவரது பூர்வீகம் நோர்வே என்று தெரிந்ததும் தமிழ் விக்கிப்பிடியா மூலம் அவரது பெயரை சரியாக “ரூவால் டால்” என உச்சரிக்கக் கற்றுக் கொண்டேன்.

அழுக்கான தூர்நாற்றம் வீசக்கூடிய அசிங்கமான மனிதர்கள் தான் டிவிட்ஸ்.  எல்லா நாளும், எல்லா வாரமும், எல்லா மாதமும் கெட்டதையே எண்ணிணால் நாம் டிவிட்களாகிவிடுவோம் என்பதை ஒரு சிறுகதை மூலம் அழகாக கூறியுள்ளார் டால்.  மிஸ்டர் டிவிட் பல நாள் குளிக்காமல் உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்து சாதுக்களைப் போல் காட்சியளித்தான். அவன் உணவு உட்கொள்ளும் போது சிந்திய உணவு அவன் தாடியில் சிக்கிக் கொள்ளும்.  அதை அவன் கையால் தட்டிவிட்டு, கையைச் சட்டையில் துடைத்துக்கொண்டு விகாரமாகக் காட்சியளித்தான். மத்தி மீனின் வாலும், பாலாடைக் கட்டியும் இன்னும் பிற காய்ந்து போன சோறு எப்போழுதும் அவன் தாடியில் இருக்கும். மிஸ்ஸர்ஸ் டிவிட்டும் அவ்வாறே இருப்பாள், ஆனால் அவள் முகத்தில் ரோமங்கள் இருக்காது. அவள் கையில் ஒரு தடியுடன் எப்போதும் வலம் வருவாள். அந்த தடியைக் கொண்டு சிறுவர்களையும், நாய் மற்றும் பூனையையும் உதைப்பாள். மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் டிவிட் இருவரும் ஒருவரை ஒருவர் குழிப்பறித்து சண்டடையிட்டுக் கொள்வதை ரூவால் டால் அழகாகக் கூறியிருப்பார்.  ஒரு முறை, மிஸ்ஸர்ஸ்.டிவிட் தன் தோட்டத்திலுள்ள உள்ள மண் புழுக்களைக் கொண்டு ஸ்பெக்கடீ உணவைத் தயாரித்து மிஸ்டர். டிவிட்டுக்குக் கொடுத்தாள். அந்த உணவு கசப்பாகவும் கொழகொழவென இருப்பதாகவும் கூறினான். அதற்கு அவள் இது மண்புழு ஸ்பெக்கடீ அப்படிதான் இருக்கும் என்று கூறி கையையும் காலையும் உதறிக் கொண்டு  சிரித்தாள்.  இவளை பழிவாங்க மிஸ்டர். டிவிட் அருகிலுள்ள குளத்திலிருந்து ஒரு தவளை எடுத்துக் கொண்டு அவளது படுக்கையின் போர்வைக்குள் அந்த தவளையை வைத்தான். மிஸ்ஸர்ஸ் டிவிட் உறங்கச் செல்ல,  போர்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டாள். தவளையோ அவள் மீது எகிறி குதித்தது உட்கார்ந்தது, அவள் தவளையைப் பார்த்ததும் அலரியடித்துக் கொண்டு ஓடுனாள். மிஸ்டர் டிவிட்டோ இதைப் பார்த்து விழுந்து , விழுந்து சிரித்தான்.  இவ்வாறாக இவர்களுக்குள் நடக்கும் சில சண்டைகளை அழகாக  கூறிப்பிட்டுள்ளார் டால். இதைத் தொடர்ந்து, கதையின் அடுத்தக் கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் டால்.  மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் டிவிட் பறவைக் கறி விருப்பிகள். அவர்களின் தோட்டம் பச்சைப் பசேல் என இல்லாமல் காய்ந்து காட்சியளிக்கும். மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் டிவிட், ஒய்வுப் பெற்ற சர்கஸ் பயிர்ச்சியாளர்கள். அவர்கள் muggle-wump என்ற குரங்கை கூண்டிற்குள் அடைத்து அதை தலைக் கீழாக நிற்கவைத்து சாகசங்களைக் காட்டுனார்கள். தந்தை குரங்கு கீழேயும், தாய் குரங்கு மேலேயும் அதற்கு மேல் குட்டி குரங்கும் தலைக் கீழாக பல மணிநேரம் நிற்க வைத்து சித்திரவதை செய்தார்கள்.

வாரத்தின் ஒரு நாள் பசையை மரத்தின் மீது தடவி பறவைகளைப் பிடித்து, சமைத்து உண்பார்கள். இவர்களின் கொடுமையிலிருந்து ரொலி-பொலி (Roly-Poly) என்ற பறவையின் மூலம் எப்படி இந்த குரங்குகள் அவர்களை தந்திரம் செய்து கொல்கிறது என்பதே மீதி கதை. கதையின் முடிவை முற்றிலும் வித்தியாசமாக அமைத்துள்ளார் ரூவால் டால்.

ரூவால் டாலின் கதைகள் இதுவரை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்யப்படவில்லை என்பதை எஸ். ரா வின் பதிவிலிருந்து தெரிந்துக் கொண்டேன்.

Advertisement

One Response to தி டிவிட்ஸ் (The Twits) : ரூவால் டால் (Roald Dahl)

  1. நல்ல பகிரிவு பிரகதீஷ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s