pic2.jpg

வழக்கமாக மிக அதிகப் பொருட்ச் செலவில் கேளிக்கைப் பூங்கா அமைக்கப்படுவதுண்டு,  ஆனால் வேலூரில் ஒரு ஆன்மீகப் பூங்கா அமையுள்ளது சுமார் 300 கோடி மதிப்பில்.  இதற்கு “ஸ்ரீ புரம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இக்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டத் திட்டமிட்டுள்ளார்கள்.  சுமார் 100 ஏக்கர் பரப்பில் ஸ்ரீ நாராயானிப் பீடம் இதைக் கட்டத் திட்டமிட்டுள்ளார்கள்.  இதனால் வேலூரின் பார்வை சுற்றுலா பயணிகளின் பக்கம் திரும்பும் என்பதில் ஐயமில்லை.  இதற்கான அனைத்து பணிகளும் முழுவிச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதை தவிர  மேலும் மிகப் பெரிய  சிருடி ஸ்ரீசாய் பாபா ஆஸ்ரமம் ஒன்று கட்டத் திட்டமிட்டுள்ளார்கள் என்று ஒரு வதந்திப் பரவிவருகிறது. 

Posted by: brak | May 2, 2007

Chennai 600028

இயக்கம் : வெங்கட் பிரபு
இசை : யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு : கேப்பிடல் சினிமா, SPB சரண்

சென்னையில் மிகவும் புகழ்ப் பெற்ற இரவு ஒளி வெள்ளோட்டத்தில் நடைப்பெறும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்துள்ளார்கள். இப்படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இல்லாமலே
கதையை நகர்த்திச் செல்கின்றனர். இராயபுரத்தைச் சேர்ந்த “ராக்கர்ஸ்”க்கும் அணிக்கும், விசாலட்சிதோட்டத்தைச் சேர்ந்த “ஷார்க்ஸ்” அணிக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் சண்டையே படத்தின் கதை. இதில் ஷார்க்ஸ் அணி வீரர்கள் கதாநாயகர்களாக சித்தரிகக்ப்பட்டுள்ளது. இறுதியாக “லகான்” படத்தை நினைவுப்படுத்துகிறது.
படத்தில் நகைச்சுவைக்காட்சி ரசிக்கும்படியாகவுள்ளது….
மொத்தத்தில் சென்னை 600 028 பார்கலாம்.

ஒவ்வொரு வருடமும் தி வீக் பத்திரிக்கை இந்தியாவின் பத்து சிறந்த மருத்துவமனைகள் எவை என்பதை பட்டியலிடும். வேலூருக்குப் பெருமைச் சேர்க்கும் சி.எம்.சி இந்த ஆண்டு தரப் பட்டியலில் சற்றுப் பிண்ணடைவைச் சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு நான்காம் இடத்திலிருந்து இந்தாண்டு ஒன்பதாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள்து. இருப்பினும் இவை கீழ்கண்ட துறைகளில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிற்து.
1.மகப்பேறு மருத்துவம்font
2.இருதய நோய்
3.கைனக்காலஜிஸ்டு

« Newer Posts

Categories